பட்டப்பகலில் பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை

0 2670

திருச்சியில் முன்விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெறு வருகிறது.

பாலக்கரை பகுதி பாஜக செயலாளராக இருந்த விஜய்ரகு, அதே பகுதியிலுள்ள இருசக்கர வாகன பாதுகாப்பகத்தில் காசாளராகவும் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மிட்டாய் பாபு என்பவனுக்கும் அரசியல் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

image

இந்த நிலையில் காலை விஜய்ரகு பணிபுரியும் இடத்துக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் வந்த மிட்டாய்பாபு, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

image தகவலறிந்து வந்த போலீசார், விஜய்ரகுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments