அமெரிக்கத் தூதரகம் அருகே மீண்டும் ராக்கெட்டுகள் வீசி தாக்குதல்

0 1836

 ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது, 3 ராக்கெட்டுகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

image

ஒரு ராக்கெட் தூதரகத்தின் உணவகத்தில் விழுந்ததாகவும், அப்போது உணவருந்தியவர்களில் ஒருவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர் அமெரிக்கரா அல்லது தூதரகப் பணியில் உள்ள ஈராக்கைச் சேர்ந்தவரா என தெளிவுபடுத்த அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டது.

மற்ற இரு ராக்கெட்டுகள் உணவகத்தின் அருகில் விழுந்ததாக கூறப்படும் நிலையில் அவற்றால் பாதிப்புகள் ஏற்பட்டனவா என தகவல் ஏதும் இல்லை. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் அப்துல் மஹதி, இத்தகைய தாக்குதல்களால் தங்கள் நாடு போர்ச் சூழலுக்குள் இழுக்கப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments