இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை

0 1997

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது. விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு நேரத்திலும் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் திறந்திருக்கும். சுற்றுலாவையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் இலக்குடன் இத்திட்டம் இன்று அமலுக்கு வருகிறது.

கடற்கரைகள் அமைந்துள்ள ஜூஹூ, சவுபாட்டி, வோர்லி உள்ளிட்ட இடங்களிலும் பாந்த்ரா குர்லா வணிக வளாகம், நாரிமன் பாயின்ட் உள்ளிட்ட இடங்களிலும் தலா 6 உணவு வாகனங்கள் நிறுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு, சேவையை வழங்கவும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க போலீசார் தயார்நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments