குடியரசு தின விழாவில் விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை...

0 797

டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், நாட்டின் ராணுவ வல்லமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். 

டி 90 பீஷ்மா, கே 9 வஜ்ரா டி ரக பீரங்கிகள், புதிதாக படையில் இணைக்கப்பட்டிருக்கும் சினூக், அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள், ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை அணிவகுப்பில் இடம்பெற்றன. 

பல்வேறு படைப் பிரிவுகளின் அணிவகுப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன. எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் பாலைவனப் பகுதிகளில் எல்லையைப் பாதுகாக்கும் ஒட்டகப் படை இடம் பெற்றது. imageதமிழகக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காவல் தெய்வமான ஐயனார் சிலை மற்றும் பல்வேறு கிராமிய நடனங்களுடன் வந்த அலங்கார ஊர்தி பார்வையாளர்களைக் கவர்ந்தது. 

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், காஷ்மீரின் தால் ஏரி, தெலுங்கானாவின் பதுக்கம்மா மலர்த் திருவிழா, பூரி ஜெகந்நாத தேரோட்டம் உள்ளிட்ட அலங்கார ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

இந்த அணிவகுப்பில் செயற்கைக் கோள் முறியடிப்பு சாதனமான மிஷன் சக்தி, உள்நாட்டிலேயே தயாரான தனுஷ் வகை பீரங்கிகள் முதன்முறையாக இடம்பெற்றன. இதேபோன்று திரிசூல வடிவில் இலகுரக போர் ஹெலிகாப்டர்களும் அணிவகுத்தன. imageபெண் அதிகாரியான கேப்டன் தன்யா செர்ஜில் அனைத்து ஆண்கள் அணிவகுப்புப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். சி.ஆர்.பி.எஃப். வீராங்கனைகள் இரு சக்கர வாகனங்களில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். 

விமானப்படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் சுகோய், ஜாகுவார், டோர்னியர் உள்ளிட்ட வகை விமானங்கள் வானில் அணிவகுத்தன. 

பிரேசில் அதிபர் ஜெயிர் மெஸ்சியாஸ் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அணிவகுப்பு முடிந்ததும் ராஜபாதையில் இரு பக்கமும் கூடியிருந்த மக்களுக்கு பிரதமர் மோடி நடந்து சென்றவாறே வாழ்த்தும், வணக்கமும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments