இந்தியாவில் யாருக்கும் கொரனோ வைரஸ் இருப்பதாக உறுதியாகவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சகம்

0 1597

இந்தியாவில் இதுவரை ஒருவருக்குக் கூட கொரனோ வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சீனாவில் இருந்து 137 விமானங்கள் மூலம் வந்த 30 ஆயிரம் பயணிகளிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4 ஆயிரத்து 359 பயணிகளிடம் மருத்துவப் பரிசோதனை செய்ததில் யாருக்கும் கோரனோ வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார்.

வூஹான் நகரில் இந்தியர்கள் யாருக்கும் வைரஸ் பரவவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் சீனாவில் உள்ள தூதரகம் ஈடுபட்டுள்ளது. வூகானில் உள்ள மாணவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments