வில்சன் கொலை வழக்கு: பயங்கரவாதிகள் இருவரிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முன் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் கைதான அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகியோரை 10 நாட்கள் காவலில் எடுத்து நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இந்த வழக்கு தமிழக அரசின் பரிந்துரைப்படி தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், காவல்நிலையம் வந்த அதிகாரிகள் பயங்கரவாதிகள் இருவரிடமும் முன்விசாரணை மேற்கொண்டனர்.
துப்பாக்கிப் பயிற்சி எடுத்தது தொடர்பாக தவ்பீக்கிடமும் அப்துல் ஷமீமின் பின்னணி குறித்தும் தனித்தனியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவர்களோடு தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் பயங்கரவாதிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
Comments