ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை - மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்களின் கருத்துகளை பெறத் தேவையில்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதற்கு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த முடிவை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில், எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வெளிப்படையானது என்றும், இதில் மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை என்றும் கூறினார்.
Comments