சேலம் - சென்னை இடையிலான ட்ரூ ஜெட் விமான சேவை மீண்டும் தொடக்கம்
தொழில்நுட்பக் கோளாறுகளால் 5 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சேலம் - சென்னை இடையிலான ட்ரூ ஜெட் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சேலத்திலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சேலத்திற்கும் ட்ரூஜெட் நிறுவனம் விமான போக்குவரத்தை மேற்கொண்டு வருகிறது.
2 விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் நிலையில், கடந்த 21ஆம் தேதி ஒரு விமானம் பறவை மோதி இறக்கை சிறிது சேதமடைந்ததாலும் மற்றொரு விமானம் இயந்திர கோளாறு காரணமாகவும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
விமான நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதால் சேவை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுவது வதந்தி என்றும் விரைவில் மாலை நேர விமான சேவையை தொடங்கவிருப்பதாவும் ட்ரூஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments