பெரியார் சிலையை அவமதிப்போர் காட்டுமிராண்டிகள்: ராமதாஸ்
பெரியார் சிலையை அவமதிப்போர் மற்றும் சேதப்படுத்துவோர் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்களை குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்திருக்கலாம் என்றார். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்த கேள்விக்கு, அதில் தொடர்புடையவர்கள், உடந்தையாக இருந்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பதிலளித்தார்.
தஞ்சை பெரிய கோயில் குடமுழக்கு குறித்த கேள்விக்கு, தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, சிறப்பாக இருப்பதாக ராமதாஸ் பதிலளித்தார்.
Comments