ஆஸி ஓபன்: ஆடவருக்கான காலிறுதிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

0 912

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic ) முன்னேறியுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற ஆடவருக்கான 4ஆவது சுற்றுப்போட்டியில், அர்ஜென்டினா வீரர் டியோகோ ஸ்வார்ட்மேனை (Diego Schwartzman) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 6-3 6-4 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

மகளிருக்கான 4ஆவது சுற்றுப் போட்டியில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபியூர் (Ons Jabeur), சீன வீராங்கனை வாங் கியாங்குடன் (Wang Qiang) மோதினார்.

imageஇதில் 7-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு ஆன்ஸ் ஜெபியூர் தகுதி பெற்றார். இதன்மூலம், ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய அரேபிய மண்டலத்தை சேர்ந்த முதல் வீராங்கனை எனும் பெருமையை அவர் பெற்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments