உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி

0 1372

இரட்டை எஞ்சின் விமானங்களில் உலகிலேயே மிக நீண்டதும், மிகப் பெரியதுமாக வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் நிறுவனத்தின் 777-9X விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

425 பேர் பயணிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விமானம், தொடர்ந்து 7,600 நாட்டிக்கல் மைல் தொலைவு பறக்கக்கூடியதாகும். ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக இருமுறை சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை வானிலை சீரானதை அடுத்து சியாட்டிலில் உள்ள பெயின் ஓடுதளத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

image

பாதுகாப்பு கருதி வாஷிங்டன் கடற்கரை மற்றும் பொதுமக்கள் வசிக்காத பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் அடி உயரம் வரை வானில் பறந்த விமானம், பின்னர் தரையிறக்கப்பட்டது.

imageபோயிங் நிறுவன விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானதால், நெருக்கடிக்கு ஆளான அந்நிறுவனத்துக்கு இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி நம்பிக்கையளிப்பதாக இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments