ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராம சபைகள் தீர்மானம்

0 857

தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

image

அந்த வகையில், தஞ்சை மாவட்டம் கள்ளப்புலியூர், கத்தரிநத்தம், அழகிய நாயகிபுரம், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments