இயற்கையான இறகுடன் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ புறா
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோவை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
பறவைகள் பறக்கும்போது எவ்வாறு தங்கள் இறக்கைகளை மாற்றியமைக்கின்றன என்பதை ஆராய்ச்சி செய்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், அதன் அடிப்படையில் இந்த புறா வடிவிலான பறக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இயற்கையான இறகுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ புறா, எதிர்காலத்தில் விமான தொழில்நுட்பம் மற்றும் ட்ரோன் வடிவமைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments