பஞ்சாப் கலைஞர்களுடன் நடனமாடி அசத்திய அமைச்சர் R.B.உதயகுமார்

0 1335

மதுரையில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பஞ்சாப் மாநில கலைஞர்களுடன் நடனமாடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அசத்தினார்.

குடியரசு தினத்தையொட்டி 16 மாநில கலைஞர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டு முகாம் ரயில்வே சந்திப்பு அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்த நிலையில் கலைஞர்கள் தங்கள் மாநில பண்பாட்டை விளக்கும் வகையில் நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

image

அந்த வகையில் பஞ்சாப் மாநில கலைஞர்கள் நடனமாடி கொண்டிருந்தபோது விழா ஏற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கலைஞர்களுடன் நடனமாடினார்.

image அமைச்சரின் நடனத்துக்கு பார்வையாளர் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments