தமிழகம் முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

0 3075

71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகையில் ஆட்சியர் சீதாலட்சுமி கொடியேற்றி வைத்து காவல்துறையினர் மற்றும் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநரே தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாமக்கல்

நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு மரியாதை செய்தார்.

திருச்சி

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தேனி

தேனியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

கடலூர்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தேசியக் கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

ஈரோடு

ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவை

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து சமாதானப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

நெல்லை

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மதுரை

மதுரையில் மாவட்ட ஆட்சியர் வினய் தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாகை

நாகையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் கண்ணன் தேசிய கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்

தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், பாரம்பரிய மல்லர் கம்ப சாகச விளையாட்டு, மற்றும் கயிற்றில் தொங்கியவாறு யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவலர்கள் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், குடியரசு தினத்தையொட்டி, இக்ரா மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்து பேரணி நடத்தினர். இதில் 100 க்கும் மேற்பட்ட தியாகிகளின் புகைப்படத்துடன், அவர்களது  தியாகங்களை பொன்மொழிகளாக எழுதிய பதாகைகளை தாங்கியவாறு சென்றனர்

திருவாரூர்

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

கடலூர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சேர்மன் ராகேஷ்குமார் தேசியகொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

 தருமபுரி

தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தேசிய கொடியேற்றிவைத்து காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தொடர்ந்து மாணவ மாணவிகலின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தென்காசி

புதிய மாவட்டமாக உதயமான தென்காசியில் நடைபெற்ற முதலாவது குடியரசுதின விழாவில், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடந்தது.

சிவகங்கை

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தேசிய கொடியேற்றி காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தஞ்சை

தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கிராமிய நடனம், தற்காப்பு கலை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், குடியரசு தினத்தையொட்டி, இக்ரா மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்து பேரணி நடத்தினர். இதில் 100 க்கும் மேற்பட்ட தியாகிகளின் புகைப்படத்துடன், அவர்களது  தியாகங்களை பொன்மொழிகளாக எழுதிய பதாகைகளை தாங்கியவSாறு சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments