முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்தியா..! பதிலடி கொடுக்குமா நியுசிலாந்து..?

0 1131

இந்தியா- நியுசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெறுகிறது.

முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல், கோலி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ராவின் பந்துவீச்சு எதிரணிக்கு திணறலை ஏற்படுத்தியது.

நியூசிலாந்து அணியில் காலின் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றியைத் தொடருமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments