கூடவே இருந்து என் ஊக்கத்தை தடுத்தவர்களுக்கு நன்றி.. நடிகை வரலட்சுமி சரத்குமார்

0 2511

சிம்புவுடன் போடா போடி திரைப்படத்தில் நடித்து திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, 25 படங்களில் தான் நடித்து முடித்துள்ளது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் நடிகை வரலட்சுமி, இந்த தருணத்தில் என்ன நடந்த போதும் என்னுடன் நின்று என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் என் கூடவே இருந்து கொண்டு என்னுடைய ஊக்கத்தை தடுத்தவர்களுக்கும் நன்றி.

ஏனென்றால் அவர்களின் எதிர்மறை எண்ணம் தான் என்னை மேலும் வலிமையாக்கியுள்ளது. என்னுடன் இருந்த எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை தவறு என்று நிரூபிக்க, நான் பிடிவாதம் பிடிக்க உதவிய ரசிகர்களுக்கு நன்றி என கூறியுள்ளார் வரலட்சுமி.

என் மீது கட்டுப்பாடு இல்லாத நம்பிக்கை  வைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன். 25 படங்களில் நடித்து முடித்த பயணம் என்பது நீளமான, கடினமான பயணமாகவே இருந்துள்ளது.

நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பார்கள். என் விஷயத்தில் அது உண்மை தான். ஆனால் கனவுகள் ஒரு நாள் நிஜமாகும். என் வாழ்வில் இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களை சந்தித்துள்ளேன். 25 படங்களில் நடித்து முடித்துள்ளேன் என்பது எனக்கு பெரிய விஷயமாகவே தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தர என்னை அர்பணிப்பேன். காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும். உங்களால் முடிந்த அளவு அன்பையும், மகிழ்ச்சியையும் பரப்புங்கள் என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments