மணிக்கொருமுறை ஒரு திருக்குறளையும் அதன் பொருளையும் கூறும் மணிக்கூண்டு

0 1164

புதுச்சேரியில் பழமையான மணிக்கூண்டைப் புதுப்பித்து மணிக்கொருமுறை ஒரு திருக்குறளையும் அதன் பொருளையும் ஒலிக்குமாறு செய்து அசத்தியுள்ளனர்.

பாரதி வசித்த பாரதிதாசன் வாழ்ந்த மண்ணான புதுச்சேரியில் தமிழறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மணிக்கூண்டு புதுப்பிக்கப்பட்டு, ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை ஒரு திருக்குறளையும் அதன் பொருளையும் கூறி விளக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மணிக்கூண்டை புதுப்பிக்கும் முயற்சியை முன்னின்று மேற்கொண்ட முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வையாபுரி மணிகண்டன், தமிழை சிறப்பிக்கும் நோக்கில் இதுபோன்று மேலும் பல முயற்சிகளை எடுக்க உள்ளதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments