பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன்.. டைட்டானிக் ஹீரோ

0 1954

டைட்டானிக் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து உலக புகழ் பெற்றவர் லியானார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio). ஆஸ்கார் விருது வாங்கியுள்ள ஹாலிவுட் நடிகரான இவர், பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க மிக ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோவும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல இந்திய தொழிலதிபர் ஒருவரும் பார்ட்டி ஒன்றில் சந்தித்து உரையாடும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் பேசும் இந்திய தொழிலதிபர், நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ தமக்கு மிகவும் நெருங்கிய நண்பர் தான் என்றும் இந்திய திரை உலகம் விருப்பப்பட்டால் அவரை இந்தி திரையுலகம் அழைத்து வருகிறேன் என்றும் உறுதி அளிக்கிறார்.

பின்னர் அந்த வீடியோவில் பேசிய லியானார்டோ டிகாப்ரியோ, நான் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க மிகவும் ஆர்வமாகவும்,உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறேன். எனக்கு இது அடுத்த சவாலாக இருக்கும். எனினும் நான் நன்றாக டான்ஸ் ஆடுவேன், விரைவாக எதையும் கற்று கொள்வேன். மேலும் இந்தியாவை நேசிக்கிறேன் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments