கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1000 கோடி மதிப்புடைய ஹெராயின் அழிப்பு
டெல்லியில் ஆயிரம் கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் அழித்தனர்.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வரப்படும் ஹெராயின், பிறகு இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தல்காரர்களால் கடத்தப்படும். இதுபோல கடத்தலுக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 207 கிலோ ஹெராயினை பல்வேறு சமயங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
அதை தில்லியிலுள்ள நிலோத்தி ( Nilothi) எனுமிடத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
Comments