இலங்கை போரில் மாயமான 10 ஆயிரம் தமிழர்களை பற்றி விசாரணை நடத்த ராஜபக்சே உத்தரவு
இலங்கை போரில் மாயமான 10 ஆயிரம் தமிழர் பற்றி விசாரணை நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
ஐ.நா. சபை அதிகாரி லீலாதேவி அனந்த நடராஜாவை சந்தித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இறுதி போரின் போது காணாமல் போன 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்து இருக்கலாம் என தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த மாயமானவர்களின் குடும்பத்தினர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து மாயமானவர்கள் குறித்து விசாரணைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாயமானவர்கள் குறித்த தீவிர விசாரணைக்கு பிறகே அவர்களது குடும்பத்தினரிடம் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் தெரித்துள்ளார்.
Comments