தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

0 987

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், 23 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த மாதம் 5-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதற்கு 10 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி திரிபாதி, தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments