நிர்பயா வழக்கு: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் மனு தாக்கல்

0 1105

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளான்.

இந்த வழக்கில் முகேஷ் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் டெல்லி திகார் சிறையில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே,  கருணை கோரி தாம் தாக்கல் செய்த மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முகேஷ் சிங் மனு தாக்கல் செய்துள்ளான். அதில்,  குடியரசுத் தலைவரின் முடிவை நீதித்துறை பரிசீலனை (judicial review) செய்யும்படி முகேஷ் சிங் கோரிக்கை விடுத்துள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments