தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

0 796

தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் சிலைத் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட 21 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments