வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் நகை கொள்ளை

0 654

செங்கல்பட்டு மாவட்டம் பீர்கன்காரணையில், வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, நகைகளை கொள்ளையடித்த 4 பேர், சிசிடிவி காட்சி உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

சீனிவாசன் நகர், மூவேந்தர் நகர் ஆகிய பகுதிகளில் வீட்டில் இருந்த 2 பெண்களிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இதுதொடர்பாக, தனிப்படை அமைத்து, சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார், 4 பேரை கைது செய்து, ஆறரை சவரன் தங்க நகைகள் மற்றும் செல்ஃபோன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments