சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி இரண்டரை வயது பேத்தியை தொலைத்து நிற்கும் முதியவர்

0 1547

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதியவரை மயக்கி, அவரது இரண்டரை வயது பேத்தியை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 62 வயதில் சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி பேத்தியை தொலைத்துவிட்டு நிற்கும் நபர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

பல்லடம் அடுத்த அரசன்காடு பகுதியில் வசித்து வருபவர் 62 வயதான மாரி. மாரியின் மனைவி இரண்டாண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், மகன் சுடலை ராஜா மற்றும் இரண்டரை வயது பேத்தி மகாலட்சுமி ஆகியோருடன் மாரி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மருமகள் இசக்கி, சில ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். மாரியும் சுடலைராஜாவும் அதே பகுதியில் கார் பெயிண்டிங் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வேண்டுதல் ஒன்றை நிறைவேற்ற பேத்தி மகாலட்சுமியை பழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் மாரி. வேண்டுதலை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதற்காக வெள்ளிக்கிழமை மதியம் பேத்தியுடன் பழனி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாரியை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அணுகி பேச்சுக்கொடுத்துள்ளார். தம்மை ஆதரவற்றவர் என்றும் வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் வீட்டு வேலையை பார்த்துக்கொள்வதாகவும் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறுகிறார் மாரி.

அந்தப் பெண்ணின் மீது சபலம் கொண்ட மாரி, பெண்ணின் பெயர், ஊர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் கேட்காமல், வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். மகன் சுடலை ராஜா வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளதை சாதமாக்கிக்கொண்டு வரும்போதே கையோடு மதுவையும் வாங்கி வந்துள்ளார் மாரி. நன்றாகக் குடித்துவிட்டு அந்தப் பெண்ணோடு உல்லாசமாக இருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருக்கிறார். மாலை கண்விழித்துப் பார்த்தபோது, பெண்ணையும் குழந்தையையும் காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்,. (( GFX 1 OUT ))

பேத்தியையும் அந்தப் பெண்ணையும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு, மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். சுடலைராஜா கொடுத்த தகவலின் பேரில் வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மப் பெண், சிறுமியை அழைத்துக்கொண்டு செல்வது பதிவாகியுள்ளது. தொடர்ந்து பல்லடம் டிஎஸ்பி முருகவேல் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, திருப்பூர் பழனி திண்டுக்கல் தாராபுரம் ஒட்டன்சத்திரம் மதுரை உள்ளிட்ட இடங்களில் தேடி வருகின்றனர். (( GFX 2 OUT ))

மகள் வயதுடைய பெண் மீது கொண்ட சபலத்தாலும் மதுவுக்கு அடிமையானதாலும் பேத்தியை பறிகொடுத்துவிட்டு நிற்கும் முதியவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments