அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் மூளை சலவை செய்யப்படுகின்றனர் - தலைமைச் செயலாளர்

0 840

அரசியல் ஆதாயத்துக்காக தொழில்நுட்ப உதவியுடன் மக்கள் மூளை சலவை செய்யப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, சிறப்பாக தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விருது வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், சாதி, மத பாகுபாடுகளை களைந்து நல்லவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

அரசியல் கட்சிகள், மக்களுக்கு என்ன தேவை என அறிந்து தேர்தலை அணுகுவதை விட்டுவிட்டு ஆலோசகர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments