தோனி ரசிகர்களுக்கு ரவி சாஸ்திரி அதிர்ச்சி தகவல்
வருகிற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை அண்மைக்காலமாக தவிர்த்துவரும் முன்னாள் கேப்டன் தோனி, விரைவில் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
Comments