சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வரவேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வரவேண்டும் என தான் பிரார்த்திப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜீயரை சந்தித்து உரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள ஆண்டாள் கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சசிகலா சிறையில் இருப்பது தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகள் பயணித்த சசிகலா, சிறையிலிருப்பது தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
திமுகவின் பொய் வழக்கால் சசிகலா சிறையில் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா இருந்திருந்தால் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்...
பெரியார் குறித்த ரஜினியின் பேச்சால் யாருக்கும் பிரச்சினை இல்லை என தெரிவித்த அவர், பெரியார் குறித்த ரஜினியின் கருத்தை பிடித்தவர்கள் வரவேற்கலாம், பிடிக்காதவர்கள் அமைதியாக இருக்கலாம் என தெரிவித்தார்.
Comments