குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

0 1763

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

image

தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

image

விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஷிஃப்ட் முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

image

சந்தேகத்துக்குரிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments