குரூப் 4 தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது

0 1990

குருப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். நெல்லை, விழுப்புரம், சிவகங்கை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குருப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடைத்தரகராக செயல்பட்டு வந்த திருவல்லிகேணியை சேர்ந்த ரமேஷ், மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற திருவல்லிகேணியை சேர்ந்த நரேஷ்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

image

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி சிறுகிராமம் என்ற ஊரை சேர்ந்த ராஜசேகரனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேலும் 3 பேரை பிடித்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமையகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், விழுப்புரத்தில் 11 பேரிடமும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேவுள்ள விஜயாபதியை சேர்ந்த இடைத்தரகர் அய்யப்பன், தேர்வு எழுதிய முத்து ராமலிங்கம் ஆகிய 2 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments