"கார் பூலிங்" குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - போக்குவரத்து போலீசார் ஏற்பாடு

0 1065

ஹைதராபாத்தில் போக்குவரத்து போலீசார் கார் பூலிங் எனப்படும் ஒரே காரில் பலரும் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

image

வாகன புகை மற்றும் அதிக வாகனங்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை பல்வேறு நகரங்களில் தலையாய பிரச்சினையாக உள்ளன. இந்நிலையில் கார் வைத்துக்கொண்டு தனி நபராக பயணம் செய்பவர்களையும் கார் பயணம் தேவைப்படுபவர்களையும் ஒருங்கிணைத்து கார் பூலிங் முறை  நடைமுறைப்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசலும் காற்று மாசுபாடும் ஒருசேரக் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.

image

இந்நிலையில், ஹைதராபாத்தில் கார் பூலிங்கை ஊக்குவிப்பது தொடர்பாக போக்குவரத்துப் போலீசார் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments