பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை

0 1235

பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

பயோமெட்ரிக் கருவிகள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் வருகைப் பதிவு நேரம், தகவல் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன.

image

இக்கருவியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரும் 28-ம் தேதிக்குள் வருகையை பதிவு செய்யாததற்கான காரணத்தை அவர்கள் விளக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments