பாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும்: சிவசேனா

0 3210

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், ஹிந்துத்துவா கொள்கையிலிருந்தும், மராத்திய மக்களுக்கான பணியிலிருந்தும் சிவசேனா ஒருபோதும் விலகி செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதற்காக நீங்கள் உங்கள் கொடியின் நிறத்தை மாற்றி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிவசேனா எப்போதும் இந்துத்துவாவிக்காகவே குரல் கொடுத்துள்ளது. அதே போல குடியுரிமை திருத்த சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன என கூறப்பட்டடுள்ளது.

அதேபோல், நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ள சாம்னா, ஒருமாதத்துக்கு முன்பு அச்சட்டத்தை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிப்பதாகவும், ராஜ்தாக்கரேயின் இந்த நிலைப்பாட்டை மக்கள் ஏற்பார்களா, ஏற்க மாட்டார்களா என்பது தெரியவில்லை என்றும் சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments