இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரம் விற்பனை - குவியும் கண்டனம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அச்சடித்த இயந்திரம் கழிவுப் பொருளாக விற்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்கள் டேரடூனில் இயங்கி வரும் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டன.
கையால் எழுதப்பட்டிருந்த அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கை மூலம் கோர்க்கப்பட்ட அச்சுக்கோர்வை மூலம் போட்டோ லித்தோகிராபிக் முறையில் இந்த பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
இதனை பிரேம் பெஹாரி ரைசாதா என்பவர் ஆங்கிலத்திலும், வசந்த் கிருஷ்ணா வைத்யா என்பவர் இந்தியிலும் எழுதியிருந்தனர்.
இந்த இயந்திரத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருப்பதாலும், தொழில்நுட்ப மாறுபாடு காரணமாவும் இதனை பழைய இரும்புக்கு விற்றுவிட்டதாக சர்வே ஆப் இந்தியா அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரலாற்றுப் புகழ் மிக்க இயந்திரத்தை விற்பனை செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments