செம்மரங்களைக் கடத்தி வந்த கும்பல் தப்பியோட்டம்

0 732

திருப்பதி அடுத்த தலகோனா வனப்பகுதியில் செம்மரத்தைக் வெட்டி கடத்தி வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தலகோணா வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டு ஒரு கும்பல் வருவதைக் கண்டதும் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

image

ஆனால் அந்த கும்பல் தப்பி விட்டது. இதில் வேலூர் மாவட்டம் முள்ளுவாடி கிராமத்தை சேர்ந்த ஆர்.தேவந்திரன் என்பவரை மட்டும் கைது செய்து அந்த பகுதியில் இருந்து 873 கிலோ எடை கொண்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

image

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments