இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தற்காலிகமானதே - ஐஎம்ப் தலைவர்
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி தற்காலிகமானதே என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜியோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று அவர் பேசும்போது, கடந்த ஆண்டை விட நடப்பாண்டு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதற்கு, அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் பதற்றம் நீங்கியதே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை தற்காலிகமானதே என்று கிறிஸ்டலினா குறிப்பிட்டார். இந்த நிலை விரைவில் மாறும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நிதியத்தின் தலைவர் தெரிவித்தார்.
Comments