இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதே -IMF தலைவர்
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதே என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் தணிந்து, முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
எனினும், உலக அளவில் 3.3 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதம் பொருளாதாரத்திற்கு சிறப்பானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருப்பது தற்காலிகமானதே என்றும், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments