பாரத் ஹோட்டல்ஸ் குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை - ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு
பாரத் ஓட்டல் குழும நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டு சொத்து கண்டறியப்பட்டுள்ளது.
லலித் ஓட்டல்ஸ் என்ற பெயரில் 10 க்கும் மேற்பட்ட ஓட்டல்களை பாரத் குழுமம் நடத்தி வருகிறது. டெல்லி என்சிஆரில் அந்த குழுமம் மற்றும் அதன் தலைவர் ஜோட்ஸ்னா சூரிக்கு சொந்தமான 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டாத 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்பட சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 35 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததோடு,கறுப்பு பணத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வாங்கியதும் தெரியவந்தாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Comments