210 ரன்களுக்குள் நியூஸி,.யை கட்டுப்படுத்தியது முக்கியமானது.. விராட் கோலி

0 826

நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது இந்திய அணி. 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி, 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, நாங்கள் தோல்வியடைந்து அதற்கான காரணங்களை சொல்லி கொண்டிருப்பதை விட, போட்டியில் வெல்ல வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தினோம் என்றார்.

மேலும் மைதானத்தில் 80 சதவீத இந்திய ரசிகர்கள் இருந்தது எங்களை மேலும் உற்சாகமூட்டியது. 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும் போது ரசிகர்களின் ஆதரவு என்பது மிகவும் சிறப்பானது. போட்டியை இந்திய அணி சிறப்பாக முடிக்க ரசிகர்களின் ஆதரவும் ஒரு காரணம் என்றார்.

மேலும் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. மொத்தம் வீசப்பட்ட 39 ஓவர்களில் 407 ரன்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வகையான ஆடுகளத்தில் பவுலர்களை குறை சொல்ல முடியாது. நடுத்தர ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டோம். அதே போல எதிரணியை 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம். அதே போல நடந்தது சிறப்பானது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments