தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை - டி.ஜி.பி. திரிபாதி

0 863

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி கூறியுள்ளார். 

அந்த மாவட்டத்தின் களியப்பேட்டையில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே கடந்த 1998ம் ஆண்டு பெரியார் சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையின் முகம், கை பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் உத்தரமேரூர் போலீசார் , துணியை கொண்டு சிலை மூடி மறைத்தனர். சிலையை சேதப்படுத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பெரியார் சிலை மற்றும் பிற தலைவர்களின் சிலையை சேதப்படுத்தும் சமூகவிரோத சக்திகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments