CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடக்கம்

0 728

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் பணியில் சேர சி.பி.எஸ்.இ.யால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல்தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2-ஆம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

image

சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூலை 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகுதியுடைய பட்டதாரிகள் https://ctet.nic.in என்ற இணையதளம் மூலம் பிப்ரவரி 24 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 27-க்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments