வருடத்திற்கு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க யோகிபாபு முடிவு

0 1638

இனி வருடத்துக்கு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக நடிகர் யோகிபாபு கூறியுள்ளார்.

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள அவர்,கடந்த வருடம் மட்டும் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் கைவசம் 16 படங்களை வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

image

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகைச்சுவை நடிகராக பிரபலமானதும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் நடித்து வருவதாக கூறினார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இப்போது இரவு-பகலாக நடிப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம் கதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments