20 ஆண்டுகளில் முதல் முறையாக, குறையும் அரசின் வரி வருவாய்..!
கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக நடப்பு நிதி ஆண்டில், அரசுக்கு வர வேண்டிய, வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி வருமானம் குறையும் என, வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் மொத்த வருவாயில் சுமார் 80 சதவிகிதம் நேரடி வரிகள் வாயிலாக கிடைக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 13 புள்ளி 5 லட்சம் கோடி ரூபாயை இந்த இனத்தில் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், நேற்று வரை மொத்தம் 7 புள்ளி 3 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி உள்ளது.
கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இது 5 புள்ளி 5 சதவிகிதம் குறைவானதாகும். வரி வசூல் குறைவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், 5 சதவிகிதத்திற்கும் குறைவான பொருளாதார வளர்ச்சியே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
அதே போன்று, புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த ஆண்டு கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டதும் அரசின் வருவாயை பாதித்துள்ளது.
Comments