சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனாவைரஸ் நோயின் அறிகுறிகள்

0 1152

சீனாவில் இருந்து  மும்பை திரும்பிய இரண்டு பேர் கொரோனாவைரஸ் தொற்று போன்ற அறிகுறிகளுடன் கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனாவைரஸ் தாக்குதல் துங்கிய பிறகு இந்தியாவுக்கு வரும் பயணிகளில் யாருக்காவது அதற்கான அறிகுறிகள் இருந்தால் மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்குமாறு மும்பை சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் படி ஜலதோஷம், காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் வந்த இந்த 2 பேரும் மருத்துவமனை தனி வார்டில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி சுகாதார தலைமை அதிகாரி பத்மஜா கேஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து திரும்பிய யாராவது நோய் அறிகுறிகளுடன் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறு மும்பையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments