குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பது எப்படி? வழிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவு
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிரிமினல் குற்றப்பின்னணி பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தகவல் வெளியிட வேண்டும் என்ற 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு எந்த பலனையும் அளிக்கவில்லை என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இதைத் தெரிவித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், அதற்குப் பதிலாக, கிரிமினல் பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட கட்சிகள் வாய்ப்பு வழங்காமல் இருந்தால் போதுமானது என்று கருத்து தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ரவீந்திர பட் அமர்வு, தேர்தலில் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
Comments