முதல் டி20 போட்டி... இந்தியா அபார வெற்றி...!

0 3133

IND 204/4 (19)

Manish Pandey : 14(12)

Shreyas Iyer : 58(29)

Scorecard: 

Rohit Sharma c Ross Taylor b Santner - 7(6)

Lokesh Rahul c Southee b Ish Sodhi - 56(27)

Virat Kohli c Guptill b Tickner - 45(32)

Shreyas Iyer - 58(29)

Shivam Dube c Southee b Ish Sodhi - 13(9)

Manish Pandey - 14(12)* 

NZ 203/5 (20)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறிய இந்திய அணி, இதற்கு தற்போது தகுந்த பதிலடி கொடுத்து தொடரை வெற்றியுடன் துவக்கும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது இந்திய அணி.

image

 ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து  203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மன்ரோ 59 ரன்களையும், டெய்லர் 54 ரன்களையும், வில்லியம்சன் 51 ரன்களையும் சேர்த்தனர்

இதைத் தொடர்ந்து இந்திய அணி 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், கே.எல். ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் ஸ்கோர் அதிகரித்தது.

சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 56 ரன்களிலும், கோலி 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த துபேயும் 13 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளிக்கவே ஆட்டம் சூடுபிடித்தது. இருப்பினும், ஸ்ரேயாஸ் அய்யர், பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தது. இதனால் 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களை எடுத்து இந்திய அணி வென்றது.

ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்களுடனும், பாண்டே 14 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 1-0  என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ஸ்ரேயாஸ் அய்யருக்கு வழங்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY