கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பெயரில் கடன் பெற்று மோசடி எனப் புகார்
ஈரோட்டில் சங்க உறுப்பினர்கள் பெயரில் பொய் கணக்கு எழுதி, ஏழு கோடி ரூபாய் வரை கையாடல் நடந்துள்ளதாக கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அசோகபுரத்தில் இயங்கி வரும் கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் நாணய சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில் அவர்களது ஊதியப் பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ஓய்வுபெற்ற பின் வழங்கப்படுகிறது.
அவ்வாறு கடந்த ஆண்டில் ஓய்வுபெற்ற 11 பேருக்கு பணப்பயன்களைப் பெறுவதற்கான தடையில்லா சான்றை நிர்வாகம் வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக ஊழியர்களின் வைப்புத் தொகையில் 7 கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் நடந்துள்ளதாக துறை தலைமைக்குப் புகார்கள் சென்றன. இதனையடுத்து கூட்டுறவு ஒன்றிய இணை பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments