அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி: உள்ளாட்சித் துறை அமைச்சர்
அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி அடைந்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் 168 கோடி ரூபாய் மதிப்பில் 61.62 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செங்கற்களை வைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வெள்ளலூர் பேருந்து நிலைய பணி முடிந்து பயன்பாட்டுக்கு வந்தால், கோவை மாநகர மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றார்.
Comments