சேலத்தில் ராமர், சீதை படத்துடன் பேரணி செல்ல முயற்சி

0 821

சேலத்தில் தடையை மீறி ராமர் சீதை படத்துடன் பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் தந்தை பெரியார் தலைமையில், 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற பேரணியில், ராமர் சீதை சிலைகள் அவமதிக்கப்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 1971ஆம் ஆண்டில் பெரியார் தலைமையில் பேரணி நடைபெற்ற இடத்தில், ராமர் சீதை படத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு பேரணி நடைபெறும் என பாஜக அறிவித்திருந்தது.

image

இதற்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்திருந்த நிலையில், தடையை மீறி, மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பாஜகவினர் சுமார் 40 பேர் பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை தடுத்துநிறுத்தி போலீஸார் கைது செய்தனர். அப்போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments